ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அவருக்கு வாக்களிக்க மாட்டோம் என ஆர்.கே.நகர் தொகுதி மக்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் தோல்வியை தழுவார் என ஓ.பி.எஸ் அணியினர் மற்றும் ஜெ.வின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் தினகரனுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என தினகரன் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றால், இந்த நாட்டை விட்டே வெளியேறி விடுவேன் என எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.