தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்த நிலையில், இன்றும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, சேலம், பெரம்பூர், அரியலூர், திருச்சி, கரூர், சிவகங்கை, புதுக்கோடை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.