நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
வியாழன், 30 டிசம்பர் 2021 (12:28 IST)
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில் தற்போது மார்கழி மாதம் தொடங்கியுள்ளதால் மழை குறைந்துள்ளது. எனினும் பல பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் தகவலின்படி, இன்று கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.