அடுத்த 4 நாட்களுக்கு மழை ...வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (17:09 IST)
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் அறிவித்ள்ளதாவது:

இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை புதுச்சேரி மற்றும் காரைக்கார்ல் உள்ளிட்ட சில பகுதிகளில் இடிம் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யும் எனவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் எனவும், கூறியுள்ளது.

மேலும், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 -60 கிலோ மீட்டர் வேகத்தில்  பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இங்கு வசிக்கும் மீனவர்கள் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்