மர்ம காய்ச்சல்.. 40 பேர் பலி... கொரொனா 3 அலையா?

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (17:00 IST)
உத்தரபிரதேசத்தில் மர்ம காய்ச்சலால் 3 குழந்தைகள் உட்ப்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  உலக நாடுகளுக்குப்பரவிய கொரொனாவால் பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டனர்.
 
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது.  விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே  3 ஆம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர்  நிறுவனம் எச்சரித்துள்ளது.
 
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனா ல் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மர்ம காய்ச்சலால் 3 குழந்தைகள் உட்ப்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இது இந்தியாவில் பரவிவரும் கொரொனா 3 வது அலையாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்