அவதூறு செய்திகளை ஒளிபரப்பினால் கிரிமினல் வழக்கு: யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (16:45 IST)
அவதூறு செய்திகளை ஒளிபரப்பினால் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக பல யூடியூப் சேனல்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் சில செய்திகள் போலியானதாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை யூடியூப் சேனல்கள் ஒளிபரப்பினால் அந்த சேனல்களை நடத்துபவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
 
இந்த எச்சரிக்கையால் யூடியூப் சேனல்கள் வைத்திருப்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்