திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பைத் திரும்பப்பெறும் முடிவில் மத்திய அரசு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அப்போதைய திமுக பிரமுகர் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன் படி 22 ஆயுதம் தாங்கிய கமாண்டோக்கள் 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இப்போது ஸ்டாலினின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாததால் அவரது பாதுகாப்பைத் திரும்பப் பெறவேண்டும் என தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு நெருக்கமானவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அதனால் ஸ்டாலினின் இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படலாம் எனவும் தெரிகிறது.
இதுபோல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பும் ரத்து செய்யப்படலாம் என்ற செய்தியை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.