தமிழகத்தில் வேகமாக அதிகரித்த கொரோனா பாதிப்பு! – மத்திய அரசு எச்சரிக்கை!

வெள்ளி, 17 மார்ச் 2023 (09:07 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் கடந்த சில ஆண்டுகளாக ஆட்டுவித்து வருகிறது. சமீப காலமாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் வேகமாக கொரோனா பரவி வரும் 6 மாநிலங்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. அதில் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுடன் தமிழ்நாடும் உள்ளது. தமிழ்நாட்டில் 170 ஆக இருந்த கொரோனா பாதிப்புகள் ஒரே வாரத்திற்குள் 260 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சேலம், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமாக அதிகரிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்