தமிழ்நாட்டில் மேலும் எட்டு நகரங்களில் 5ஜி சேவை தொடங்க இருப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகம்m உள்பட இந்தியா முழுவதும் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று முதல் இந்தியா முழுவதும் மேலும் 34 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் மொத்தம் 365 நகரங்களில் 5ஜி சேவை இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.