இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனின் அடையாளமாக ஆதார் அட்டை உள்ளது. இந்த அட்டை தற்போது, மின்சார வாரியத்திலும், பான் கார்டிலும், பேங்கிலும் இணைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசின் சலுகைகள் யார் பெறுகிறர்கள், எங்கு வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் அனைத்தும் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த நிலையில், ஆதார் அட்டை விவரங்களை இணையதளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாகப் புதுப்பிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. எனவே பயனர்கள் myaadhar.udai.gov.in என்ற இணையதளத்தில் ஆதார் எண்ணைப் பயன்படுத்தித் தரவுகளைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.