ஓடிடி சினிமா, வெப் தொடர்களுக்கு சென்சார்? நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Mahendran
புதன், 25 செப்டம்பர் 2024 (17:13 IST)
ஓடிடி தளங்களில் நேரடியாக ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு சென்சார் செய்வது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓடிடி தளங்களில் நேரடியாக ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் எந்த வகையான சென்சாரும் செய்யப்படுவதில்லை என்றும் இதனால் ஆபாச காட்சிகள் மற்றும் ஆபாச வசனங்கள் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாலியல் வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெறுவதை அடுத்து, ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கும் சென்சார் செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநலத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஓடிடி திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு சென்சார் செய்வது குறித்து மத்திய தொலைத்தொடர்பு துறை செயலாளர் மற்றும் மத்திய  தொழில்நுட்பத் துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது."


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்