எல்லை மீறிய சித்ரவதை...கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்!

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (16:28 IST)
பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ, தனது கணவர் தன் நகைகளைப் அபகரித்துக் கொண்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ , தனது கணவர் ஈஸ்வர் தன்னைக் கொடுமைப்படுத்தி, தனக்கு மிரட்டல்கல் விடுப்பதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து, நடிகை ஜெயஸ்ரீ கூறியுள்ளதாவது :
 
குழந்தையுடன் தனியாக வசித்து வந்த என்னை, 3 வருடங்களுக்கு முன்பு ஈஸ்வர் என்னை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சில நாட்களில் என்னை அவர் கொடுமைப்படுத்தி, என் நகைகளையும் அபகரித்துக் கொண்டார்.

மேலும் கணவருக்கு வேறொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்டேன். அப்போது முதல் என்னை அடித்து துன்புறுத்துகிறார். கணவருடன் தொடர்பிலுள்ள நடிகையிடம் இருந்து எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகிறது என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்