பெரம்பலூரில் இடி விழுந்து புதிய அருவி – மக்கள் ஆச்சர்யம் !

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (16:27 IST)
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சைமலையில் நேற்றிரவு இடி விழுந்த இடத்தில் அருவி ஒன்று உருவாக ஆரம்பித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அய்யர்பாளையம் கிராமத்தையொட்டி பச்சைமலை என்ற மலை அமைந்துள்ளது. இந்த மலையை அருகில் உள்ள மக்கள் அதிகமாக பயன்படுத்துவதில்லை என சொல்லப்படுகிறது. நேற்றிரவு பெய்த மழையால் இந்த மலையில் இடி ஒன்று விழுந்துள்ளது.

இதனையடுத்து அந்த மலையின் இடிவிழுந்த பகுதியில் இருந்து அருவி போல மழைத்தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. இதைப்பார்த்து வியந்த மக்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர். இந்த செய்தி பக்கத்து ஊர்களுக்கும் பரவவே அங்கு கூடிய அனைவரும் அருவியில் குளித்து மகிழ்ச்சியாக திரும்பினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்