அதையடுத்து அதே காலகட்டங்களில் உச்ச நடிகைகளில ஒருவராக விளங்கி வந்த நடிகை நளினியுடன் காதல் வயப்பட்டு 1087ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அந்த திருமண வாழ்வில் ஒரு சில கசப்பும் கருத்து வேறுபாடுகளும் நிலவி வந்ததால் கடந்த 2000ம் ஆண்டில் இருவரும் பரஸ்பர மனதுடன் விவாகரத்து செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அருண், அருணா என மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ராமராஜனுடனான தந்து கடந்த கால வாழ்வை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நளினி, " நான் நடிகையாக இருந்த போது ராமராஜன் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்படிதான் எங்கள் காதல் வளர்ந்தது. ஒருநாள் நான் அணிந்திருந்த உடை நன்றாக இருக்கிறது இதையே நாளைக்கு போட்டுவாங்கனு சொன்னாரு நானும் போட்டுட்டு போனேன். அன்று அந்த காதல் துளிர் விட்டு பின்னர் மீண்டும் ஒருநாள் அம்மன் கோவிலுக்கு சென்று குங்குமத்தை கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். ஆனால், அப்போது என் கையில் மருதாணி வைத்திருந்தால் நீங்களே வைத்து விடுங்கள் எனக் கூறினேன். இதன் மூலம் என் மீது உள்ள காதல் அவருக்கு அதிகமானது.
பின்னர் ஒருநாள் என் வீட்டிற்கு வந்து பெண் கேட்டார். என் குடும்பத்தினர் அவரை அடித்து உதைத்து திட்டி அனுப்பிவிட்டார்கள். நமக்காக இப்படி அடி வாங்குகிறார் என எனக்கு அவர் மீது காதல் வந்தது. அந்த நேரத்தில் அவர் திருமணம் செய்து கொள்ளலாமா? என என்னிடம் கேட்டவுடனே நான் ஓகே என்று சொல்லிவிட்டேன். அதையடுத்து திருமணத்துக்குப் பின்னர் தான் நான் அவரை காதலித்தேன் என சிரித்துக்கொண்டே கூறினார்.