வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து பலர் காயம் – முதுகுளத்தூரில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (11:33 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் மும்முரமாக நடந்து வரும் நிலையில் முதுகுளத்தூரில் வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் சில இடங்களில் வாக்கு எந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு பணி தாமதமாகி வருகிறது. இந்நிலையில் முதுகுளத்தூர் கண்டிலான் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 4 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்