குறுவட்ட விளையாட்டு பரணிபார்க் அபார சாதனை

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (23:04 IST)
பள்ளிக் கல்வித்துறையின் மூலம் நடைபெற்ற குறுவட்ட அளவிலான குழு மற்றும் தடகளப் போட்டிகளில் பரணிபார்க் பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று அபார சாதனை படைத்துள்ளனர்.
 
14 வயதிற்குட்பட்ட இளையோர் பிரிவில் மாணவர்கள் கையுந்துப் பந்து போட்டியில் முதலிடம் மற்றும் கேரம் ஒற்றையர்  மற்றும் இரட்டையர்  மாணவ மாணவியர்  பிரிவில் முதலிடமும்,  17 வயதிற்குட்பட்ட மூத்தோர் மாணவ மாணவியர்கள் கேரம் ஒற்றையர்  மற்றும் இரட்டையர்  பிரிவில் முதலிடமும் மேலும் 19 வயதிற்குட்பட்ட மிகமூத்தோர் மாணவர்கள் பிரிவில் கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து மற்றும் கேரம் மற்றும் மேஜைப்பந்துப் போட்டியில் ஒற்றையர்  மற்றும் இரட்டையர்  பிரிவில்  முதலிடமும், 19 வயதிற்குட்பட்ட மிகமூத்தோர் மாணவிகள் பிரிவில் கூடைப்பந்து மற்றும் கேரம், மேஜைப்பந்துப் போட்டியில் முதலிடமும் பெற்றுள்ளனர்.
 
மேலும் தடகளப் போட்டியில் 14 வயதிற்குட்பட்ட இளையோர் பிரிவில் மாணவர்கள் 100மீ, 200மீ, 400மீ, 600மீ நீளம் தாண்டுதல் 4x100மீ தொடர்  ஓட்டப் போட்டிகளில் இரண்டாமிடமும் , மேலும் அதே பிரிவில் மாணவிகள் 100மீ, 80மீ தடைதாண்டும் ஓட்டம் , நீளம் தாண்டுதல் போட்டிகளில் இரண்டாமிடமும். 17 வயதிற்குட்பட்ட மூத்தோர் மாணவர்கள் 200மீ, 400மீ, 4x400 மீ மும்முறைத் தாண்டுதல் போட்டியில் முதலிடமும் 100மீ, 800மீ ,1500மீ , 4 x100மீ தொடர் ஓட்டப் போட்டிகளில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர் . 17 வயதிற்குட்பட்ட மூத்தோர் மாணவிகள் பிரிவில் 200மீ, 400மீ, 1500மீ, 3000மீ மும்முறைத் தாண்டுதல் போட்டிகளில் முதலிடமும் , நீளம் தாண்டுதல் , உயரம் தாண்டுதல் ,  4 x100மீ, 4x400மீ தொடர் ஓட்டப் போட்டிகளில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர். மேலும் 19 வயதிற்குட்பட்ட மிகமூத்தோர் மாணவர்கள் பிரிவில் உயரம் தாண்டுதல் , 4x400மீ தொடர்  ஓட்டப் போட்டிகளில் இரண்டாமிடமும், மேலும் அதே பிரிவில் மாணவிகள் 1500மீ ,3000 மீட்டர்  ஓட்டப்போட்டியில் முதலிடம், மும்முறைத் தாண்டுதலில் இரண்டாமிடம் பெற்று வந்துள்ளனர் . மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகளப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்  என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
குறுவட்ட அளவில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் நடைபெற உள்ள குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள மாணவ மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பரணி பார்க் கல்விக் குழும தாளாளர்  திரு.S.மோகனரெங்கன் ,செயலர்  திருமதி.பத்மாவதி மோகனரெங்கன் , பரணி பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர்  திரு.C.ராமசுப்ரமணியன் பரணி பார்க் முதல்வர்  திரு.K.சேகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர் .
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்