சிக்குவாரா கொலையாளி?: சசிகுமார் கொலையில் புகைப்படம் வெளியிட்ட சிபிசிஐடி

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (14:15 IST)
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை வழக்கில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
 

 
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி, கோவை துடியலூர் சுப்பிரமணிய பாளையம் பகுதியில் இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கை சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதன் ஒரு பகுதியாக சசிக்குமார் கொலை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர். அதில் கொலைக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்ற சசிகுமாரை ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தில் சிலர் பின் தொடர்ந்து சென்றது பதிவாகியுள்ளது.
 
இந்த கும்பலில் உள்ள 4 பேரில் ஒருவரின் அடையாளம் தெளிவாக பதிவாகியுள்ளது. அவரது படத்தை வைத்து காவலர்கள் விசாரித்ததில் அவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.
 
இந்நிலையில் காந்திபுரம் பகுதியில் சசிகுமார் கொலை வழக்கில் சந்தேகப்படும் படியாக நடமாடிய நபர்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான முக்கியமான 14 புகைப் படங்களை சிபிசிஐடி காவல்துறை யினர் வெளியிட்டுள்ளனர்.
 
இந்த புகைப்படங்களில் உள்ள நபர்கள் குறித்த தகவல்களை சிபிசிஐடி காவல் துறையினருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ள காவல் துறையினர், தங்களது தகவலை sidcbcidcbe@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் 94981 04441 என்ற அலைபேசி எண்ணிலும் தெரியப்படுத்தலாம் எனவும் அறிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்