கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி: மாற்று இடத்தில் நேரடி வகுப்பா?

திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (12:45 IST)
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளிகளில் தற்போது ஆன்லைனில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மாற்று இடத்தில் நேரடி வகுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் பகுதியில் என்ற பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார் 
 
இதனையடுத்து பள்ளியில் ஏற்பட்ட பயங்கர கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் மாற்று இடத்தில் நேரடி வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது
 
 சின்னசேலம் வாசுதேவநல்லூர் என்ற கிராமத்தில் உள்ள குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் பாலாஜி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகிய இடங்களில் 9 முதல் 12 வகுப்புகளை சேர்ந்த கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்