குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான்: விஜயகாந்த் மகன் தடாலடி!!!

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (09:30 IST)
தேமுதிக உடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் முந்தியடிக்கும் வேலையில் குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான் என விஜயகாந்த் மகன் தடாலடியாக பேசியுள்ளார்.
 
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துவிட்ட நிலையில் தேமுதிகவுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
 
இதற்கிடையே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேசினர். எல்லா கட்சிகளும் தேமுதிகவை நோக்கி படையெடுப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கேப்டனின் மகன் விஜயபிரபாகரன், தேமுதிகவை யாரும் எளிதில் எடைபோட்டு விடவேண்டாம். எல்லா கட்சிகாரர்களும் கேப்டனை நோக்கி படையெடுக்கிறார்கள். இதுவே தேமுதிகவின் பலம். குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான் என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்