மு.க.ஸ்டாலின் ஒரு மணி நேரம் தூர்வாரமுடியுமா ? ஜான்பாண்டியன் கேள்வி

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (21:14 IST)
ஹிந்தி மொழி கற்பதை வரவேற்க வேண்டும். மொழிகளை கற்பதால் தவறில்லை என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு மணி நேரம் தூர்வாரமுடியுமா ? என்றும் கரூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் அதிரடி பேட்டியளித்துள்ளார்.
 

கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது., ஹிந்தி மொழி கற்பதை வரவேற்க வேண்டும். மொழிகளை கற்பதால் தவறில்லை., அரசியல் பணி நிமித்தமாக டெல்லி சென்றால் மொழி பெயர்க்க மொழிபெயர்ப்பாளரின் அழைத்துச் செல்லவேண்டிய சூழல் உள்ளது. அதனால், இந்தி மொழியைக் கற்பதில் தவறில்லை. அதேசமயம் இந்தி மொழி திணிப்பை யாரும் ஏற்க மாட்டார்கள். பொதுவாக மத்திய மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டங்களை திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் மனப்போக்கை கைவிடவேண்டும்.

இவர்கள் அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை என்றாவது வரவேற்று ஆதரவு தெரிவித்தது உண்டா? இந்த மனப்போக்கை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகிறது .

அதேசமயம், இதற்கு போட்டியாக செயல்படுவதாக கூறும் மு.க.ஸ்டாலின் ,ஒரு மணி நேரமாவது தூர்வாரும் பணியில் அவரால் ஈடுபட முடியுமா? என்றும், அரசின் நிலைக்கு எதிர்நிலை கொள்ளவேண்டும் என்ற நோக்கோடு இது போன்ற பணிகளில் ஈடுபடுவது என்பது மக்களை திசை திருப்பும் செயலாகும். உண்மையிலேயே அவர்கள் தூர் வாரினால் அதனை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வரவேற்க்கும் என்றும், கரூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் பேட்டி அளித்தார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்