18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அந்த 18 தொகுதிகளும் காலி என்று அறிவிக்கப்பட்டால் எந்த நேரத்திலும் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இந்த 18 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.
பெரம்பூருக்கு மதுசூதனன் ஜெயக்குமார் நியமனம்.
மேலும் எஸ்பி.எம்.சையதுகான், ஆர்.பார்த்தசாரதி, ஆகியோரும் ஆண்டிபட்டி தொகுதிக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.