யாராலும் எங்களைப் பிரிக்க முடியாது : ஓ.பன்னீர் செல்வம்

திங்கள், 22 அக்டோபர் 2018 (15:02 IST)
தமிழகத்தில் துணை முதல்வர் பொறுப்பை முன்னாள் முதல்வரும் , திமுக தலைவருமான கருணாநிதி உருவாக்கினார்.அப்பத ஸ்டாலினுக்காகவே உருவாக்கப்பட்டது என்றா சர்ச்சைகள் கூட அப்போது எழுந்தது. ஆனால் அது கலைஞர் உருவாக்கி இருந்தாலும் தற்போது அதிமுகவிற்கு  மிக சௌகர்யமாகவே இருக்கிறது போலும்.
ஏனென்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது அவர் சிறைக்கு செல்ல நேர்ந்த போது மட்டும் தான் அவருக்கு பதிலாக ஒ.பன்னீர் செல்வம் முதன்வரானார். இது தமிழகம் அறிந்தது. ஆனால் ஜெயலலிதா இருந்தவரைக்கும் யாருக்கும் தன் அதிகாரத்தை அவர் பகிர்ந்தளித்து இல்லை.
 
கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்தி ஒரு ஆளுமைக்கு இலக்கணமாக திகழ்ந்த ஜெயலலிதா இறந்த பிறகுதான் கட்சியின் போக்கு நாலாமூனா சுங்கம் மாதிரி பிரிந்தது. எப்படியோ சின்னம்மா என்ற சசிகலாவின்  புகழ் பாடி வந்த ஓ.பிஎஸ்,இ.பி..எஸ் உட்கட்சி விவகாரங்களால் அவரை கட்சியிலிருந்து வெளியேர்றினர்.

இதனையடுத்து தினகரன் முதற்கொண்டு அந்த மன்னார் குடி குடும்பத்துடன் இனி ஒட்டு இல்லை உறவும் இல்லை என சில நாட்களுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார். அதன் பின் எடப்பாடியாரும் ,பன்னீர் செல்வமும் தங்களுக்குள் எந்த சண்டையும் ,கருத்து வேறுஒபாடும் இல்லை என்று  கூறினர்.
 
இந்நிலையில்ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் அதுபற்றி கருத்து கூறியிருக்கிறார். அவ ர் கூறியதாவ்து:
 
எனக்கும் முதலைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உள்ள ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது.மேலும் எந்த திசையிலிருந்து சுனாமி வந்தாலும் எங்கள் இருவரின் ஒற்றுமையை குலைக்க முடியாது . இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்