காலியான தொகுதிக்கு ஆறு மாதத்தில் தேர்தல்..

வியாழன், 25 அக்டோபர் 2018 (17:19 IST)
மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் இன்று 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில்  நீதிபதி சத்திய நாராயணன் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று தன் இறுத் திர்ப்பு அளித்தார்.
ஏற்கனவே உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இந்த வழக்கில் சபாநாயகர் அளித்த தீர்ப்பில் 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உத்தரவிட்டார்.
 
ஆனால் இரண்டாம் நீதிபதியான சுந்தர் இந்த வழக்கில் மாறுபட்டதீர்ப்பை வழங்கி அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.அதாவது, 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என தீர்ப்பு அளித்திருந்தார்.
 
இரு நீதிபதிகளும் முரணான தீர்ப்பை வழங்கியதால் இவ்வழக்கின் இறுதி தீர்ப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றத்தால் மூன்றாவது நீதிபதியாக சத்திய நாரயணன் நியமிக்கப்பட்டார்.
 
தமிழகன் முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் தீர்ப்பு இன்று நீதிஅபதி சத்திய நாராயணனால் வாசிக்கப்பட்டது.
 
அப்போது 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பு வழங்கினார்.
 
இதனை ஆளுங்கட்சிகள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.ஆனல் தினகரம் தரப்பினர் சோகம் தழுவிய முகத்துடன் இருந்தனர்.மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறுயுள்ளனர்.
 
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டால்  ஆறுமாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது:
 
தகுதி நீக்கம் செய்யப்பட்ட  எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டால் அடுத்த ஆறுமாதத்தில் தேர்தல் நடத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்