கழுவி சுத்தம் செய்யப்படும் பேருந்துகள்: மக்களே பயணிக்க தயாரா..!!

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (09:55 IST)
ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பேருந்து சேவைகளை துவங்க பணிமனைகளில் பேருந்துகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வசதிகளும் தடை செய்யப்பட்டது. சிறப்பு ரயில் சேவை மட்டும் துவங்கியுள்ள நிலையில் பேருந்து சேவையும் துவங்கப்பட உள்ளது என தெரிகிறது. 
 
ஆம், மூன்று கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நான்காம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அதிகபடுத்தப்படும் என்பதால் போக்குவரத்துகள் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி உப்பளம் சுப்பையா சாலையில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. 
 
பேருந்துகளை சுத்தம் செய்ய வரும் ஊழியர்கள் மாஸ்க் அணிந்தும் கிருமிநாசியை அடிக்கடி பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்