பேருந்து கட்டண உயர்வும், எம்.எல்.ஏக்களின் சம்பள உயர்வும்

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (22:25 IST)
ஒரு சரியான ஆட்சியாளர்களை பொதுமக்கள் தேர்வு செய்யாவிட்டால் ஆட்சியாளர்களுக்கு பெருத்த லாபமும், பொதுமக்களுக்கு பெருத்த நஷ்டமும் ஏற்படும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

ஓட்டுக்கு பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்ட மக்களுக்கு பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்து ஓட்டு பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு 100% சம்பளம் உயர்வும் நிகழ்ந்துள்ளது.

அரசியல் என்பது பொதுமக்களுக்கான சேவை என்பது காமராஜர், கக்கன் ஆகியோர்களோடு முடிந்துவிட்டது. அதன் பின்னர் அரசியல் என்பது ஓட்டுக்கு பணம் கொடுத்து முதலீடு செய்து அதன் பின்னர் கொளுத்த லாபம் பெறும் ஒரு பிசினஸ் ஆக மாறிவிட்டது.

எனவே இனியாவது பொதுமக்கள் பணம் வாங்கி கொண்டு பகட்டானவர்களுக்கு ஓட்டு போடாமல், நல்லவர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்