இந்நிலையில் பெயரிடப்படாத இப்புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்து தருவதாக சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டிருந்தார். அது விக்னேஷ் சிவன் படத்தின் மூலமாக இறுதி செய்யப்பட்டுள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். நாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும். படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.