திருநங்கைகள் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பொதுவாகத் தமது குடும்பச் சூழலை விட்டு விலகி, திருநங்கைகள் எனும் குழுமத்தில் கலந்து விடுகிறார்கள்.
டெல்லியைச் சேர்ந்த மகாமங்கலேஷ்வர் பவானி என்ற திருநங்கை கின்னர் அகதா என்ற ஆன்மீக இயக்கத்தில் உறுப்பினராக உள்ளார். சிறுவயதிலிருந்து சமூகத்தில் பல்வேறு சவால்கள் மற்றும் இன்னல்களை சந்தித்தே இன்று தன்னம்பிக்கை மனிதராக இருக்கும் பவானி நேயத்தை பரப்பும் கொள்கை கொண்ட இயக்கத்தில் பணியாற்றுகிறார். எனது குடும்பம் பெரியது என்பதால் சாப்பாட்டிற்கு கடுமையாக கஷ்டப்பட்டிருக்கிறோம். எனது 10 வது வயதில் தான் திருநங்கை என்பதை உணர்ந்த பின்பு, கேளிக்கு உள்ளானேன். பள்ளியில் கிண்டலுக்கு உள்ளானதால் படிப்பை நிறுத்தினேன். 13 வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன்.
மேலும் தான் அழக்காக இருந்ததால் பல பாலியல் பிரச்சனைகளுக்கு ஆளானேன், பல பிரச்சனைகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், அதனால் மனம் தளரப்போவதில்லை, தனது நற்பணிகளை தொடர்ந்து செய்வேன் என்று அவர் கூறியுள்ளார்.