நெல்லை மாவட்டம், புதிய பஸ் நிலையத்தில், மாடசாமி என்ற காவல்துறை அதிகாரி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையில் கட்டு கட்டாக பணமும், கணினியும் இருந்ததை பார்த்தார்.
இதுகுறித்து அவர் விசாரணை மேற்கொண்டபோது, அந்த பணம் பேச்சிமுத்து என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரிடம் அந்த பணமும் கணினியும் ஒப்படைக்கப்பட்டது.