கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை ஏற்றத்தின் காரணமாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.75,000ஐ தாண்டி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில், இன்றும் சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ20 உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 அதிகரித்து, புதிய விலை நிலவரத்தை எட்டியுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு, சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேடுவது போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதேபோல், வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.1,000/- உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி, நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,380
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,400
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 75,040
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 75,200
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,232
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,254
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,856
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 82,032
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.127.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.127,000.00