பீகார் உட்பட பிற மாநிலங்களை சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டில் வசிக்கும்போது, அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்குவது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசிய கருத்துக்கள் கடும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன.
வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை அளிப்பதில் தவறு இல்லை என்று தெரிவித்த டி.டி.வி. தினகரன் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தங்கி தொழில் மற்றும் பிழைப்பு நடத்தி வருவதாகவும், அவர்களுக்கு தமிழக அரசால் குடும்ப அட்டை வழங்கப்படும் போது, வாக்களிக்கும் உரிமை வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலைக்காகப் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது, அங்கு அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டால் அது சரியாக இருக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.