காசிமேட்டில் தீ விபத்து - ரூ.80லட்சம் மதிப்புள்ள படகு எரிந்து சாம்பல்

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (13:02 IST)
சென்னை காசிமேட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் சேதம்
 
காசிமேட்டில் மீன்பிடியில் காலை 5 மணியளவில் 9 பேர் கொண்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது பூஜை செய்துள்ளனர். அப்போது கற்பூரம் தவறி விசைப்படகில் விழுந்ததால் பாதி தூரம் சென்ற  போது படகில் தீ பற்றி எறிந்துள்ளது. 
 
பின்னர் அதில் பயணித்த 9 மீனவர்களும் கடலில் குதித்து உயிர் தப்பித்தனர். அதையடுத்து காற்றின் வேகத்தினால் கரை ஒதுக்கிய அந்த படகை 50 மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.80லட்சம் மதிப்பிலான படகுகள் எரிந்து சாம்பல் ஆனது. மேலும், 6,000 லிட்டர் டீசலுடன் மீன்பிடிக்க சென்ற  விசைப்படகு முற்றிலும் தீ பற்றி எரிந்து சாம்பலானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்