டீக்கடை, பிரியாணி கடைகளுக்கு பாதுகாப்பு இல்லை! – திமுக மீது பாஜக குற்றச்சாட்டு!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (13:47 IST)
சென்னையில் சுவர் விளம்பர விவகாரத்தில் திமுக – பாஜக இடையே மோதல் எழுந்துள்ள நிலையில் திமுகவிற்கு பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை நங்கநல்லூர் பகுதியில் சுவரில் விளம்பரம் செய்வது தொடர்பாக பாஜக – திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில் பாஜக மகளிர் அணியை சேர்ந்த இருவர் தாக்கப்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது. திமுகவின் இந்த செயலை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ், தமிழகத்தின் பல இடங்களில் பாஜக கொடி பறப்பது கண்டு திமுக அஞ்சுகிறது. தமிழகத்தில் இருப்பது பழைய பாஜக அல்ல,, இது பாஜக 2.0. திமுகவால் தமிழகத்தில் டீக்கடைகளுக்கும், பிரியாணி கடைகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. காவல்துறையினருக்கே தகுந்த பாதுகாப்பு இல்லை என பேசியுள்ளார்.

விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக – திமுக மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்