சர்ச்சைக்குரிய கருத்து… பாஜக நடவடிக்கை எடுக்கும் – பாஜக தலைவர் அறிவிப்பு !

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (13:43 IST)
தந்தை பெரியாரைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தமிழக பாஜக தகவல் தொடர்பு அணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தந்தை பெரியாரின் 46-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கட்சி வேறுபாடு இல்லாமல் அதை அனுசரித்த போது, தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பெரியார் மற்றும் மணியம்மையை பற்றியும் அவர்களது திருமணம் பற்றியும் அருவருக்கத்தக்க வகையில் ஒரு கருத்தை தெரிவித்தது. ஆனால் கண்டனங்கள் எழுந்ததும் உடனடியாக அந்தப் பதிவை நீக்கியது.

இது தொடர்பாக பதிலளித்த பாஜக மாநில தகவல் தொடர்பு அணித் தலைவர் நிர்மல் ’பதிவை நீக்கினாலும் அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடுதான்.’ எனக் கூறினார். இதையடுத்து தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் சி பி ராதாகிருஷணன் ‘இறந்தவர்களை விமர்சனம் செய்யும் பழக்கம், பாஜகவிற்கு ஒருபோதும் கிடையாது. அந்த ட்விட்டர் பதிவு குறித்து பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, நடவடிக்கை எடுக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்