தந்தை மரணம் தெரியாமல் நீட் எழுதும் மாணவனுக்கு உதவி: தமிழிசை

Webdunia
ஞாயிறு, 6 மே 2018 (13:12 IST)
திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவரை அவரது தந்தை நீட் தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு நேற்று அழைத்து சென்றார்
 
அங்குள்ள ஒரு விடுதியில் இருவரும் தங்கியிருந்த நிலையில் இன்று காலை நீட் தேர்வு எழுத கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு மையத்திற்கு சென்றார். இந்த நிலையில் அவரது தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தந்தை மரணம் தெரியாமல் நீட் தேர்வு எழுதி வரும் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்திடம் இன்னும் சில நிமிடங்களில் அவரது தந்தை மரணம் குறித்த செய்தி தெரிவிக்கப்படவுள்ளது.
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் ,நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வை எழுதி வருகிறார் என்ற செய்தி மேலும் துயரத்தை தருகிறது.
 
மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழக பாஜக சார்பில் எங்களது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு வருங்காலத்தில் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக பாஜக உதவும்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்