முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழிசை விருப்பம்!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2016 (08:43 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சரியாக இன்னும் பல நாட்கள் ஆகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.


 
 
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, லண்டன், எயிம்ஸ், அப்பல்லோ மருத்துவர்கள் என மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் இன்று அப்பல்லோ வர உள்ளனர் என கூறினார்.
 
மேலும், ஜனாதிபதி ஆட்சி, எயிம்ஸ் டாக்டர்கள் வருகை, முதல்வர் உடல் நிலை உள்ளிட்ட விவகாரங்களில் பாஜக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். தொடர்ந்து பேசிய அவர் முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு கிடைத்தால் சிகிச்சை அளிப்பேன் என்றார். இதனை சமூக வலைதளங்களில் பலர் கிண்டலடித்து வருகின்றனர். தமிழிசை சவுந்தரராஜன் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்