ஆர்.கே.நகரில் நடிகை கவுதமி போட்டி? பாஜக-வின் பக்கா பிளான்

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (16:24 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக பாஜக சார்பில் பலர் போட்டியிடும் முடிவில் உள்ளனர். இந்நிலையில் நடிகை கவுதமியை களமிறக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைப்பெற உள்ளது. தமிழக அரசிய சூழலில் இந்த தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
திமுக கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதைத்தொடர்ந்து தேதிமுக தனித்து போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உபி-யில் அமோக வெற்றிப்பெற்ற பாஜக, தமிழக பாஜக சார்பில் யாரை களத்தில் இறக்குவது என தீவிர ஆலோசனையில் உள்ளது. 
 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட பலர் ஆர்.கே.நகரில் போட்டியிட உள்ளனர். ஆனால் பாஜக மேலிடம் நடிகை கவுதமியை களமிறக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற இந்தத் தொகுதியில், பிரபலமான ஒருவரை களமிறக்க வேண்டும் என நிர்வாகிகள் அலோசித்து வருகிறார்களாம். இந்த ஆலோசனையில் பல பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாம். அதேநேரம் பாஜக மூத்த நிர்வாகி ஒருவர், நடிகை கௌதமியை நேரில் சந்தித்துப் பேசி உள்ளாராம். இன்னும் ஒரிரு நாட்களில் முடிவுகள் தெரிந்துவிடும்.
அடுத்த கட்டுரையில்