விபூதியைக் கீழே கொட்டியவர்கள் இப்போது... ஸ்டாலினை விமர்சித்த முருகன்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (09:36 IST)
தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

 
தனது நேர்த்திகடனை செலுத்தியதும் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், கந்தசஷ்டியை இழிவுபடுத்தியவர்களுக்குப் பாடம் புகட்டினோம். இந்து மதத்தை அவமதித்தவர்கள், விபூதியைக் கீழே கொட்டியவர்கள் இப்போது இந்து மதத்தைப் பாதுகாப்போம் என்கின்றனர்.
 
வேல் யாத்திரையை விமர்சித்த ஸ்டாலினை அதே இடத்தில் தை மாத கிருத்திகை நாளில் பழனி முருகன் வேலை எடுக்க வைத்தார். தேர்தலைக் குறிவைத்து ஸ்டாலின் இதைச் செய்திருந்தாலும் அவருக்கு முருகன் நல்ல ஆயுளைத் தர வேண்டும் என்றார் முருகன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்