போஸ்டர் அடித்தவரை வீட்டிற்கு அனுப்பிய அதிமுக தலைமை கழகம்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (09:06 IST)
சிக்கலில் மாட்டி தவிக்கும் 'போஸ்டர்' அறிவாளிகள் :
 
தான் சார்ந்திருக்கும் கட்சியில் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் என்று தனக்கு தானே எண்ணி கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் சில 'போஸ்டர் அறிவாளிகள்' தங்கள் கட்சியின் கொள்கை என்ன ? கோட்பாடுகள் என்ன ? என்பதை கூட அறியாமல் எதையாவது அடித்து எங்கையாவது ஒட்டி வைத்து விடுகிறார்கள். 
 
அது சில சமயங்களில் பிரச்சனைகளாக மாறி விஸ்வரூபம் எடுக்கையில் இருக்கிற பதவியும் கட்சி தலைமை பறித்து வீட்டிற்கு அனுப்பிவிடுகிறது. அப்படித்தான் நெல்லை, பாளையம்கோட்டையில் போஸ்டர் அடித்தவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளது அதிமுக தலைமை கழகம். 
 
10 போஸ்டர் அடித்து பதவி போனது தான் மிச்சம் என்று தலையில் துண்டை போட்டு அமர்ந்து இருப்பவர்கள் ஊருக்குள் ஆயிரம் பேர் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கார சார பேச்சும் , கிண்டலும்  நிலவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்