மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் திடீர் ராஜினாமா: அடுத்த மேயர் யார்?

Siva

வியாழன், 16 அக்டோபர் 2025 (08:24 IST)
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது, மதுரை மாவட்ட திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேயர் தரப்பிற்கும், பெரும்பான்மையான திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே ஆரம்பம் முதலே மோதல் போக்கு நிலவி வந்தது. சமீபகாலமாக, அமைச்சர் பிடிஆர் பழனிவேல், மேயரின் கணவர் மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, 23 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, ஐந்து மண்டல தலைவர்கள் உள்ளிட்டோரும் பதவி விலகினர். இதன்பின், மேயரின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டு, சமீபத்தில்தான் ஜாமீனில் வெளிவந்தார்.
 
அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகளின் காரணமாக மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். இந்த ராஜினாமா அக்டோபர் 17ஆம் தேதி மாமன்றக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மேயர், பி. மூர்த்தி அல்லது பிடிஆர் ஆதரவாளரா என்ற விவாதம் தற்போது திமுக-வில் எழுந்துள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்