தமிழகத்தில் பாஜக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை இலக்கை நோக்கி வேகமாகச் செல்கிறது-பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேச்சு......

J.Durai
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (12:55 IST)
கோவை தெற்கு மாவட்டம், மாநகர் மாவட்ட பாஜக சார்பில், பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாஜக மாநில தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், கனகசபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியதாவது: 
 
கடந்த செப்.2 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் இணையதளம் மூலம் வேகமாக நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் நாடு முழுவதும் 75 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
 
தமிழக அமைச்சரவை மாற்றம் என்பது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, ஓட்டிற்கு பணம் கொடுக்கவும், அரசு கஜானாவை காலி செய்து வெற்றி பெறுவதற்கான மாற்றம் தான். இவர்கள் அதிகளவு பணம் சப்பாதித்து கொடுப்பார்கள், மேலும் தமிழக அமைச்சர்கள் கூட்டம் திருடர்கள் கூட்டம் போல உள்ளது.
 
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதவி கொடுத்ததை கண்டு உச்ச நீதிமன்றமே அஞ்சி பிணை கொடுத்து தவறிழைத்து விட்டோமோ என கருதி, தனி நீதிபதியை அமைத்து வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி உள்ளது என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்