சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில், 12ல் 7 சட்டசபை தொகுதிகளில் ஆம் ஆத்மி குஜராத்தில் வெற்றி பெறும் என்று கூறியதால் தோல்வி பயத்தால், பாஜக ஆம் ஆத்மி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், டில்லியில் மதுபான உரிமை வழங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி சிபிஐ துணை முதல்வர் சிசோடியா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் முக்கிய குற்றவாளி என பாஜக முதல்வர் கெஜ்ரிவாலை குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.