பாஜகவுக்கு அடிபணியாதவர்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை விட்டு பயமுறுத்துவதாக பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் மதுபான உரிமம் வழங்கதில் முறைகேடு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஸ் சிசோடியா மீது சிபியை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கூறி வரும் நிலையில் டெல்லியில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் தீர்மானத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ளார். தற்போது டெல்லி சட்டசபையில், 70 இடங்களில் 62 ல் ஆம் ஆத்மி உள்ளனர். பாஜவுக்கு 8 எம் எல் ஏக்கள் உள்ளனர். நேற்று இந்த தீர்மானத்தின் போது, நடந்த விவாதத்தில் பாஜவினர் வெளி நடப்பு செய்தனர்.