போராட்டத்துக்கு ஆள் செட்பண்ண பாஜகவினர்: சோறுபோடாமல் இழுத்தடித்த பரிதாபம்

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (11:57 IST)
போராட்டத்திற்கு கூட்டிச்சென்று சாப்பாடு போடாமல் ஏமாற்றிவிட்டதாக பாஜகவினர் மீது மதுரை மக்கள் குற்றம்சாட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
மதுரையில் அரசால் சீல் வைக்கப்பட்ட கிராணைட் குவாரிகளை மீண்டும் திறக்கக்கோரி பாஜகவினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள பாஜகவினர் மதுரையை சுற்றுயுள்ள கிராமங்களில் உள்ள பெண்களுக்கு தலா 200 ரூபாயும், சாப்பாடும் கொடுப்பதாக கூறி நூற்றுக்கணக்காணோரை வரவழைத்ததாக தெரிகிறது.
 
ஆனால் போராட்டத்தில் பங்குபெற்ற பெண்களுக்கு பாஜகவினர் பேசியபடி சாப்பாடு கொடுக்காமலும், அவர்களுக்கு பணம் தராமலும் ஏமாற்றிவிட்டு சென்றதாக பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்