விஜய் முதல்வராவார் என பேட்டியளித்த பிரபலத்திற்கு விஜய்யின் அதிரடி பதில்

புதன், 2 ஜனவரி 2019 (21:20 IST)
நடிகர் விஜய்யின் முன்னாள் பி.ஆர்.ஓ ஒருவர் விஜய் குறித்தும், அஜித் குறித்தும் ரஜினி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நமது தளபதி விஜய் அவர்களின் முன்னாள்  மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாக பணிபுரிந்தவர் தற்போது வேறு சில காரணங்களால் அப்பணியில், நமது தளபதி விஜய் அவர்களுடன் இல்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்.

மேலும், அவர், நமது மக்கள் இயக்கதில் யாதொரு பொருப்பையும் இதுநாள் வரை வகிக்கவில்லை !

இருப்பினும், தளபதி விஜய் அவர்கள்  பெயரை பயன்படுத்தி ஒரு சிலர், அவர்களது சொந்த கருத்தை, தளபதி விஜய் அவர்களின்  கருத்தை போல் ஊடகங்களில் வெளியிடுவதை நமது மதிப்புமிகு தளபதி விஜய் அவர்கள் ஏற்க்கவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

அதோடு, நமது தளபதி விஜய்  அவர்கள் எந்த காலக்கட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக, தரம் தாழ்ந்தோ, ஒப்பீட்டு பேசியதில்லை! அப்படி யாரையும் பேச சொல்லி யாருக்கும் நமது தளபதி விஜய் அவர்கள்  அதிகாரம் அளிக்கவில்லை என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஆகவே, தளபதி விஜய் குறித்த தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துக்களை யாரும் நம்பவேண்டாம் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்