தமிழகம் உட்பட, மும்மொழி கொள்கையை அமல்படுத்தாத மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என, பாஜக தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தேசிய கல்வி கொள்கையை உள்ளடக்கிய மும்மொழி கொள்கையை அமல்படுத்த முடியாது என, தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழகத்திற்கான கல்வி நிதியை மும்மொழி கொள்கையை ஏற்று கொண்டால் தான் விடுவிக்க முடியும்" எனக் கூறியதால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
இந்த நிலையில், பாஜக வழக்கறிஞர் மணியன் என்பவர், மும்மொழி கொள்கையை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். "பொய்யான காரணங்களை காட்டி மும்மொழி கொள்கையை தமிழகம் உட்பட சில மாநிலங்கள் ஏற்க மறுக்கின்றன. எனவே, அதனை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும், அதன் முடிவில், சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.