தொகுதி வரையறை காரணமாக, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் 31 தொகுதிகளாக குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இது குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி உள்ளார்.
இந்த நிலையில், இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்குப் பின்னர், அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, தமிழகத்தில் தொகுதிகளை குறைக்கக் கூடாது என்று கோரிக்கை விட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்திற்குப் பின்னர் ஜனாதிபதியை சந்திக்கும் தேதி மற்றும் நேரம் கேட்கப்பட்டு, அதன் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.