கரூரில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (22:49 IST)
பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
 
கூட்டத்திற்கு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆற்றல் மிகு செயல் வீரர்  V.V. செந்தில்நாதன் அவர்கள் தலைமை வகித்தார்.
 
மாநிலத் துணைத் தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான திரு. கே. பி. ராமலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு வழிகாட்டினார்கள்.
 
வருகின்ற ஏப்ரல் மாதத்தில் மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளும் நடை பயணத்தை, கரூர் மாவட்டத்திற்குள் வருகின்ற போது,   ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ வரவேற்பு தந்து நடை பயண நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று வழிகாட்டினார்கள்.
 
மேலும் பூத் கமிட்டியை வலுப்படுத்தவும், ஒன்றியம் தோறும் செயற்குழு கூட்டமும் அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை கூட்டமும் நடத்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார்கள்.
 
இக்கூட்டத்திற்கு மாவட்ட,நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து பிரிவு, அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்