அதிமுக அரசை குத்தாமல் குத்தும் பாஜக: சர்ச்சையை கிளப்பும் ட்விட்!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (10:55 IST)
கிசான் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதற்கு மாநில அரசே பொறுப்பு என நாராயணன் திருப்பதி கருத்து.
 
மத்திய அரசால் விவசாயிகளுக்கு நிதியுதவியாக மாதம் தோறும் 6 ஆயிரம் வழங்கப்படும் பிரதம மந்திரியின் கிசான் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல லட்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர், விவசாயிகள் கவுரவ நிதி திட்டம் மத்திய அரசுடையது. செயல்படுத்துவது மாநில அரசே. முறைகேடுகளின்றி செயல்படுத்துவது தான் மாநில அரசின் கடமை. தவறுகளுக்கு பொறுப்பு மாநில அரசே என குறிப்பிட்டுள்ளார். 
 
இதன் மூலம் இந்த தவறுகளுக்கு அதிமுக தான் காரணம் என பாஜக கூறுகிறதா என கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அதிமுக - பாஜக மத்தில் சுமூக சூழ்நிலை இல்லாத நிலையில் இது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்