தேர்தல் 2021: 20 பேர் பட்டியல ரெடி பண்ண பாஜகவுக்கு ஏன் தாமதம்?

சனி, 13 மார்ச் 2021 (08:22 IST)
தமிழகம், புதுச்சேரிக்கான பாஜக வேட்பாளர்கள் யார் யார் என இன்று அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அதிமுக தலைமை தங்கள் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பட்டியலை வெளியிட்டது. 
 
தமிழகத்தில் திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், கொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயமுத்தூர், விருதுநகர், அவரக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி (தனி), காரைக்குடி, தாராபுரம்( தனி) , மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே தமிழகம், புதுச்சேரிக்கான பாஜக வேட்பாளர்கள் யார் யார் என முடிவு செய்ய நட்டா தலைமையில் பாஜக மத்திய தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று தமிழக மாநில தலைவர் எல்.முருகன் டெல்லி சென்றிருந்தார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில் இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்