கமல்ஹாசன் இந்த தொகுதியை தேர்வு செய்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கோவை தெற்கு தொகுதியை திமுக காங்கிரஸுக்கும், அதிமுக பாஜகவுக்கும் கொடுத்துவிட்டது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் அங்கே பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடாத தொகுதி என்பதால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது ஒரு காரணம். மற்றொரு காரணமாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 13 சதவீத வாக்குகளைக் கொடுத்த தொகுதி என்பதாலும் கமல் அந்த தொகுதியில் களமிறங்க உள்ளாராம்.